இயற்கைப் பாதுகாப்பு, மனிதநேயம், ஊழல் எதிர்ப்பு ஆகிய இலக்குகளை மையமாகக் கொண்டு எதிர்கால நல்லுலகை அமைக்க மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக நம் பசுமை இந்தியா தொடங்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய்க்கு ஒரு மரக்கன்று திட்டம் மூலம் இது வரை ஊழலுக்கு எதிரான உறுதிமொழியோடு 28000 மாணவர்கள் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டுள்ளனர். பசுமை மீட்பை நோக்கமாகக் கொண்டு நன்மக்கள் உருவாக்கப் பயிற்சியை நடத்தி வருகிறோம். எழில்மிகு நம் பூமித்தாய் மீண்டும் பச்சைப் பசேலென வண்ணமாகிட, ஆட்சியாளர்கள் சிறப்பான திட்டங்களைக் கொண்டு வரவேண்டும். ஆனால் ஓட்டுக்குப் பணம், ஜாதி ஓட்டு, சந்தர்ப்பவாத கூட்டணி, முதலாளித்துவ ஆளுமை போன்ற காரணங்களால் நல்ல ஆட்சியாளர்கள் உருவாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே நன்மக்கள் உருவாக்கத்தின் தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளையே நம் பசுமை இந்தியா மேற்கொண்டு வருகிறது.