பாட்டுக் குரல் தேர்வு
நம் பசுமை இந்தியா தயாரிக்கவுள்ள நிகழ்ச்சிகளுக்காகப் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சொந்த குரலில் 4 நிமிடங்களுக்கு மிகாமல் பாடிப் பதிவு செய்து அனுப்ப வேண்டும். பின்னணி இசை எதுவும் இருக்கக் கூடாது. தமிழ்த் திரைப்படப் பாடல்களிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். காணொலி அனுப்பக் கூடாது. குரல் ஒலி மட்டும் அனுப்ப வேண்டும் (not video, only audio file). தாங்கள் பாடல் பதிவு தொடங்குவதற்கு முன்னர் தங்கள் பெயர், தந்தை பெயர், முகவரி, வயது ஆகியவற்றைப் பதிவிட வேண்டும். தங்களிடம் உள்ள செல்பேசியிலிருந்தே பாடல் பதிவு செய்து அனுப்பலாம். பின்வரும் 5 ராகங்களில் ஏதாவது ஒன்றை நிச்சயம் தேர்வு செய்ய வேண்டும்.
ரீதிகெளளை, சாருகேஸி, சக்கரவாகம், கெளரிமனோஹரி, கீரவாணி
கட்டணம் ரூ.100, கடைசி தேதி 20.10.2020.
முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி 15.11.2020
மாவட்ட அளவில் தேர்வு இருக்கும். 01.01.2010, 01.01.2002க்கு முன் பிறந்தோர் மற்றும் பொது பிரிவு ஆகிய 3 பிரிவுகளில் ஆண், பெண் தனித் தனியாகத் தேர்வு செய்யப்படுவர். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுவோரிலிருந்து மாநிலப் போட்டி நடத்தப்படும். மாநில அளவிலான போட்டிக்கு நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும். மாநிலப் போட்டியில் தேர்வு செய்யப்படுவோர் “நம் பசுமை இந்தியா” நிகழ்ச்சிகளுக்குத் தேர்வு செய்யப்படுவர்.
பின் வரும் இணைப்பில் கட்டணம் செலுத்தி அதன் நகல் மற்றும் தங்கள் பெயர், தந்தை பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல், பிறந்த தேதி, தாங்கள் பாடியுள்ள ராகத்தின் பெயர், தங்கள் ஆசிரியர் பெயர், பதிவு செய்யப்பட்ட குரல் ஆகியவற்றை ourgreenindia2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். போட்டியாளர்கள் OUR GREEN INDIA நிர்வாகிகளோடு தொடர்பு கொள்ளக் கூடாது. தங்கள் ஐயங்களை ourgreenindia2020@gmail.com மின்னஞ்சலில் கேட்டுத் தீர்த்துக் கொள்ளலாம்.