இயற்கைப் பாதுகாப்பு, மனிதநேயம், ஊழல் எதிர்ப்பு ஆகிய இலக்குகளை மாணவர்களிடம் கொண்டு செல்லும் முயற்சிகளை மேற் கொண்டு வருகிறோம். ஒரு ரூபாய்க்கு ஒரு மரக்கன்று என்ற திட்டத்தின் கீழ் இது வரை 28000 மரக்கன்றுகள் நட்டுள்ளோம். நம் பசுமைச் சூழல் மாசடையாமல், மீண்டும் மலர்ச்சி பெறுவதற்கு நல்ல ஆட்சியாளர்கள் தேவை. ஆனால் ஓட்டுக்குப் பணம், ஜாதி ஓட்டு வங்கி, சந்தர்ப்பவாத கூட்டணி உள்ளிட்ட காரணங்களால் நல்ல ஆட்சியாளர்களை மக்கள் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்குப் பொது மக்களும் காரணிகளாக இருக்கிற சூழல் தொடர்வதால் மாணவர்களுக்கு நன்மக்கள் உருவாக்கப் பயிற்சி கொடுத்து வருகிறோம்.